இந்த தொகைக்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்; ஊசி இடம் கொடுக்காமல்.. கொட்டித்தீர்த்த நடிகை சுபத்ரா!
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை சுபத்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நடிகை சுபத்ரா
விஜேவாக அறிமுகமாகி, சீரியலில் நுழைந்தவர் நடிகை சுபத்ரா. கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். தற்போது நெகட்டிவ் ரோலில் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், மாடலிங் பண்ணும் போது நிறைய விளம்பரம் பண்ணி இருக்கிறேன். அப்படி பண்ணும் போது கூட இந்த பிரச்சனை வந்தது இல்லை. இப்போது பண்ணும் போது அதெல்லாம் இருக்கிறது. அன்னைக்கு நான் வாங்கிய பெரிய சம்பளம் வாங்கியதை தாண்டி பார்த்தால்,
அதே சம்பளம் கேட்கும் போது, இந்த தொகை என்றால் இது தனி அட்ஜெஸ்ட்மெண்ட், இது என்றால் தனி அட்ஜெஸ்ட்மெண்ட் தேவையில்லை என்று காட்டி அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கேட்பார்கள். அதனால் தான் விளம்பரம் செய்வதையே நிறுத்திவிட்டேன். அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிற சினிமா எனக்கு தேவையில்லை, எனக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ,
அட்ஜெஸ்ட்மெண்ட்
அவர்களுடன் நான் வேலை செய்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன். இருக்கிறதை பண்ணிட்டு சந்தோஷமாக இருப்பேன் என்று சுபத்ரா பகிர்ந்துள்ளார். பல சீரியல்கள் பண்ணி இருக்கிறேன், எந்த இடத்திலுமே, நம்ம இருக்கிறதை பொறுத்து தான். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பலர் பேர் கூறி கேட்டிருக்கிறேன்.
ஊசி இடம் கொடுக்காமல் ஏன், நூல் நுழையப் போகிறது. அதற்காக எல்லா பெண்களையும் அப்படி சொல்லவில்லை, ஒருசில பெண்கள். நல்லா இருக்கிற இயக்குனர்களிடம், நல்லா இருக்கிற தயாரிப்பாளர்களிடம், சிலர் வரவா, டேட்டிங் போலாம், இங்க போலாம் என்று ஒரு பெண் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு ஏத்துக்கொண்டால், மற்ற 9 பெண்களை அவன் தப்பா தான் பார்ப்பான்.
எந்த பொண்ணுமே இது தேவையில்லை, திறமை மதித்து நடிக்க கூப்பிட்டால் நான் நடிக்கிறேன் என்ற ஒரு விசயம் வருகிறதோ அன்னைக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சத்தியமாக இருக்காது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
You May Like This Video