ஆண்களே.. உங்க பொண்டாட்டிக்கு இதை மட்டும் பண்னுங்க - நடிகை நீபா அட்வைஸ்!
ஆண்கள் மனைவிக்கு சப்போர்ட் செய்யுங்கள் என நீபா அட்வைஸ் செய்துள்ளார்.
நடிகை நீபா
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நீபா. சினிமாவில் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சப்போர்ட் முக்கியம்
இந்நிலையில் சமீபத்தில் நடிகை நீபா அளித்த பேட்டி ஒன்றில், கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெற்றோர்கள் சப்போர்ட் பண்ணனும். கல்யாணத்துக்கு பிறகு கணவருடைய சப்போர்ட் ரொம்பவே முக்கியம். என்னுடைய கணவரும் அவர் வீட்டில் உள்ளவர்களும் என்னையும் என் அவர் புரிந்து கொண்டு எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள்.
எல்லோருக்கும் இது மாதிரி வாழ்க்கை அமையுமா என்று தெரியவில்லை. எல்லோருமே அவர்களுடைய மனைவிக்கு சப்போர்ட் செய்யுங்கள். மற்றவர்கள் பேசுவதை பற்றி யோசித்தால் நம்முடைய வாழ்க்கையில் அடுத்த ஸ்டேப் போக முடியாது.
எனக்கு என் பேமிலி என்ன நினைக்கிறார்கள் மட்டும்தான் ரொம்ப முக்கியம். அடுத்தவங்க நினைக்கிறார்கள் ஷேர் பண்ணிக்க மாட்டேன். அப்படி பண்ணினால் அடுத்தடுத்து நகரவே முடியாது என அட்வைஸ் செய்துள்ளார்.