உனக்கு இனி நான் மட்டும் தான்.. கைகோர்த்து நிற்கும் நடிகை ரச்சிதா - வைரல்!
நடிகை ரச்சிதா சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர்.
வைரல் பதிவு
இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய தந்தையின் 11 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை குறிக்கும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு உனக்கு நான்.. எனக்கு நீ.. என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்.
இவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களையும் அனுதாபங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil