பாக்கியலட்சுமி நேகாவுக்கு பிரபல கிரிக்கெட்டர் உடன் காதலா? - நடிகை விளக்கம்!
பிரபல சின்னத்திரை நடிகையான நேகா பிரபல கிரிக்கெட்டரை காதலிப்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நேகா. இவர் சிறு வயதில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்திருப்பார்.

இவர் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டார். மேலும், சில தினங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்னாப்ச்சாட் மூலமாக பில்டர் மூலம் வீடியோ எடுத்து அதை அப்லோடு பண்ணி இருந்தார்.
அதை பார்த்த ரசிகர்கள் நேகா கமிட் ஆகிட்டார் போல. அதனால் தான் அவருடைய வருங்கால பார்ட்னர் பற்றி அப்டேட் கொடுப்பதற்காக நேகா இப்படி ஒரு வீடியோ கிரியேட் பண்ணி இருக்காரு என்ற செய்து பரவி வந்தது.
விளக்கம்
இந்நிலையில், இவர் அந்த செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, "அநியாயம் பண்ணுறீங்க உங்களால ஒரு ஸ்னாப் சாட் பில்டர்கூட யூஸ் பண்ண முடியல.

ஒரு போட்டோ வெளியிட்டதுக்கு இப்படி எல்லாமா வதந்தி பரப்புவீங்க" என்று அவர் ரிப்ளை கொடுத்திருந்தார்.
தொடர்ந்து இவர் கிரிக்கெட்டர் பத்திரனாவின் புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களா? எப்ப கல்யாணம்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இதற்க்கு சிரிக்குறதா அழுகறதானு கூட தெரியல, இது மோசமான செயல்" என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil