ரூ.2 லட்சம் தரேனு பேரம் பேசினாங்க; அப்போ விட்டுட்டு இப்போ சொன்னா எப்படி? நடிகை ஆதங்கம்!
நடிகை ஜெயலட்சுமி தான் சந்தித்த கசப்பான சம்பவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை ஜெயலட்சுமி
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஜெயலட்சுமி. மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இன்று நான் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால், அதன்பின் பல வலி இருக்கிறது. ஒரு பிரபலமான இயக்குநர் ஒருவரின் சீரியலில் நடிக்க என்னை அழைத்தார்கள், தினமும் காலை வீட்டுக்கு கார் வந்து விடும், இரவும் வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
கசப்பான அனுபவங்கள்
ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மாத்தான் உட்கார்ந்து இருக்கனும் எந்த ஒரு சீனிலும் என்னை நடிக்க வைக்கவில்லை. இப்படியே 14 நாட்கள் படப்பிடிப்புக்கு நான் சும்மா சும்மா போய் வந்தேன். அதன் பிறகுதான் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த இயக்குநர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்பதை புரிந்து கொண்டேன்.
பிரச்சனை நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு, பல ஆண்டுகள் கழித்து, இயக்குநர் குறித்தோ, நடிகர் குறித்தோ பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், உடனே அது தப்பு என்று சொல்லுங்கள் அப்போது தான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார்.
ஒருமுறை பார்க்கில் என்னை ஒருவன் தவறான இடத்தில் தொட்டான், நான் அவனை துரத்திப்பிடித்து செருப்பால் அடித்தேன். ஒரு முறை எனக்கு வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று ஒரு தொலைபேசியில் இருந்த மெசேஜ் வந்தது.
அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தான், அதில், பல நடிகைகளின் புகைப்படத்தை வைத்து பேரம் நடக்கிறது. அதில் எனக்கு இரண்டு லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இப்படி நடிகர்களுக்கு தெரியாமலே பல சம்பவம் நடக்கிறது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.