பல பேர் முன்னாடியே மேலே கை வைத்த அவர்..! யாரும் கண்டுக்கல...பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வேதனை!!
தொடர்ந்து நடிகைகள் தாங்கள் சந்தித்துள்ள பாலியல் சீண்டல் குறித்து அடுத்தடுத்த தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகை ரிஹானா
சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பவர் ரீஹானா. சன் டிவியின் "ஆனந்த ராகம்", ஜீ தமிழின் "மீனாட்சி பொண்ணுங்க" தொடர்களை அடுத்து விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'விலும் முக்கிய வேடத்தில் ரிஹானா நடித்து வருகின்றார்.
முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த இவர், பிறகு சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
தவறாக நடந்துகொண்டார்
இவர் தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான பாலியல் சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பேட்டியில், தான் செவிலியராக இருந்த போது, தினமும் பேருந்தில் தான் பயணம் மேற்கொண்டு வருவேன் என குறிப்பிட்ட அவர், அப்போது நபர் ஒருவர் தான் மீது தவறாக கைவைத்தார் எனக் கூறினார்.
அது தனக்கு மிகவும் எரிச்சலை கொடுக்க, தான் சத்தம் போட்டு பின் சம்பவத்தை நடத்துனரிடம் கூறியதாக குறிப்பிட்டு, அதன் பிறகே அவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் என்றார். ஆனால், தான் சத்தம் போட்ட போது, பேருந்தில் இருந்து யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Astrology: தவறியும் இவர்களை திருமணம் செய்யாதீங்க.. நட்சத்திர பொருத்தம் சிக்கல்- உங்களுக்கு எப்படி? Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
