20 வயசுலேயே அட்ஜஸ்ட் பணிக்க தயாரானு கேட்டாங்க...நடிகை ரெஜினாவின் கசப்பான அனுபவம்
நடிகை ரெஜினா தான் சந்தித்த கசப்பான சம்பவம் ஒன்றினை அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரெஜினா
2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் தமிழ் பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. சினிமா மீதான காதலின் காரணமாக நடிகையான இவர், தமிழை தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’,‘ராஜதந்திரம்’,‘மாநகரம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், தான் சிறு வயதில் சந்தித்த கசப்பான சம்பவம் குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
20 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட்
அவர் இது குறித்து பேசும் போது தான், பட வாய்ப்பில்லாமல் இருந்தபோது சிலரிடம் வாய்ப்புகள் கேட்டதாக குறிப்பிட்டு, அப்போது ஒருவர் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’டுக்கு தயாராக இருந்தால் உடனடியாக வாய்ப்புக் கிடைக்கும் என கூறியதாக தெரிவித்தார்.

அப்போது அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்றும் என் சம்பள விஷயம் பற்றி பேசுகிறாரோ என தான் நினைத்தாக கூறிய ரெஜினா, பிறகுதான் தன் மேனேஜரிடம் அது குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டதாக கூறி அப்போது தனக்கு வெறும் 20 வயதுதான் என தெரிவித்தார். மேலும், அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை தான் எதிர்கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan