இயக்குனர் அந்த மாதிரி.. நாங்க கண்ணமூடிட்டு பண்ணுவோம் - நடிகை ஓபன் டாக்!
சீரியல் நடிகை தனது சீரியல் அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்பொழுது மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கிக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்.
பேட்டி
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஹரிப்பிரியா, இந்த சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இந்த சீரியலை பொருத்தவரை எங்களுக்கு எந்த கருத்தோ அல்லது ஆலோசனையோ கொடுப்பது கிடையாது. ஏனென்றால் அதைவிட சிறப்பாக இயக்குனர் திருச்செல்வம் யோசித்து வைத்திருப்பார்.

வசனங்களாக இருக்கட்டும் காட்சி அமைப்பாக இருக்கட்டும் எதையுமே நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். இயக்குனர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிட்டு இருப்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.
அந்த அளவுக்கு அந்த சீரியல் கதையுடன் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே நாங்கள் எதுவும் புதிதாக அவர்களுக்கு ஆலோசனையும் அல்லது ஏதேனும் மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது" என்று கூறியுள்ளார்.
You May Like This Video
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil