மீண்டும் சின்னத்திரையில் இணைந்த நடிகை நமீதா - எந்த சீரியல் தெரியுமா?

serial zee tamil namitha reentry
By Anupriyamkumaresan Aug 16, 2021 05:09 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் மூலம் நடிகை நமீதா, மீண்டும் சின்னத்திரையில் இணைந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை நமீதா.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர், விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ‘மச்சான்’ என்ற மந்திர வார்த்தையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த நமீதா, படவாய்ப்பு குறைந்ததால் தயாரிப்பாளர் வீராவை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டார். பின்னர் கணவர் வீராவுடன் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்துள்ளார்.

மீண்டும் சின்னத்திரையில் இணைந்த நடிகை நமீதா - எந்த சீரியல் தெரியுமா? | Namitha Re Entry To Zee Tamil Serial

இதைத்தொடர்ந்து ‘பெளவ் வெளவ்’என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடிகை தேவயானியின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ சிரீயல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

இதை ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நமீதாவின் வருகையால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.