Sunday, Jun 22, 2025

ஸ்பாட்ல பண்ண சொல்லுவாங்க.. நான் கர்ப்பம் ஆகிட்டேன் - வெளிப்படையாக பேசிய மாளவிகா!

Malavika Tamil Cinema Tamil Actress
By Vinothini 2 years ago
Report

நடிகை படத்தில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

மாளவிகா

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா மேனன்.

actress malavika

ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்று அடையாளம் கண்டனர். எனவே, தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இவர் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் மூலம் பல ரசிகர்களை ஈர்த்தவர்.

விஜய்க்கும் அவரது மகனுக்கும் உள்ள பிரச்சனை.. சந்தோசமா இருக்கும் - உண்மை உடைத்த பிரபலம்!

விஜய்க்கும் அவரது மகனுக்கும் உள்ள பிரச்சனை.. சந்தோசமா இருக்கும் - உண்மை உடைத்த பிரபலம்!

பேட்டி

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "கதை சொல்லும்போது முத்தக்காட்சி சொல்லுவாங்க.. ஆனால் சில சமயம் ஸ்பாட்ல கேட்பாங்க அப்போது நாம் இல்லனு சொல்லமுடியாது. அது அந்த அந்த நடிகைகள் பொறுத்தது. நடிகர் விஜயின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

actress malavika

குறிப்பாக அவருடன் அறிமுக பாடலில் நடனம் ஆட வேண்டும் என்று கேட்டார்கள். படத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால், சில மாதங்கள் கழித்து தான் அந்த அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அப்போது, நான் கர்ப்பமாகி விட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் நடனம் ஆடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

ஆனால், நடிகர் விஜய்யின் படம் என்பதால் படத்திலிருந்து விலக மனம் வரவில்லை. எனவே, ஒரு மாடல் அழகிய போல அங்கும் இங்கும் நடப்பது போன்ற காட்சிகள் மட்டும் சில நிமிடங்கள் நடித்திருந்தேன்" என்று கூறினார்.