விஜய்க்கும் அவரது மகனுக்கும் உள்ள பிரச்சனை.. சந்தோசமா இருக்கும் - உண்மை உடைத்த பிரபலம்!

Prabhu Deva Vijay Tamil Cinema jason sanjay Tamil Actors
By Vinothini Nov 18, 2023 03:30 PM GMT
Report

 நடிகர் விஜயின் மகன் குறித்து பிரபல நடிகர் பேசியுள்ளார்.

விஜய் மகன்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர், இவரது மகன் ஜேசன் சஞ்சய் சிறு வயதிலேயே இவருடன் போக்கிரி படத்தில் நடனம் ஆடியுள்ளார். இவருக்கு சினிமா மீது ஆர்வம் உள்ளதால் இவர் கன்னடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை படித்து வந்தார்.

vijay and his son

இவர் சமீபத்தில் இயக்குனராக தனது முதல் படத்தை எடுப்பதற்காக பிரபல லைக்கா நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் எதுவும் பேசாததால் சமீப காலமாக இவருக்கும் இவரது மகன் ஜேசன் சஞ்சய்க்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று இணையத்தில் பரவி வந்தது.

சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்? - அதிதி போட்ட திடீர் பதிவு!

சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்? - அதிதி போட்ட திடீர் பதிவு!

நடிகர் பேட்டி

இந்நிலையில், நடிகர் பிரபுதேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யின் மகன் குறித்து பேசியுள்ளார். அதில், " ஜேசன் சஞ்சய் இப்போ படம் பண்ணப்போறாங்க, நீங்க விஜய்யை வைத்து இயக்கினீர்கள் தற்போது அவரது மகன் இயக்குநராகிறார் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர், " கிரேட்-ல.. பாருங்க வாழ்க்கை எப்படி மாறிக்கொண்டே போகிறதுனு. எனக்கே ரொம்ப ஹாப்பியா இருக்குதுனா பாருங்க.. அவரோட அப்பா விஜய்க்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும்.

வாழ்க்கை சீக்கிரமாக மாறிக்கிட்டே போகுது" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் " இவர்களை வைத்து எவ்வளவு ரூமர்ஸ் பரப்பினீர்கள்.. அவர்கள் ஹாப்பியாக தான் இருகாங்க.. சண்டை எதுவும் இல்லை" என்று கமன்ட் செய்து வருகின்றனர்.