சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்? - அதிதி போட்ட திடீர் பதிவு!
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, சினிமா மீது தனக்கு உள்ள ஆறுவத்தினால் இவர் படத்தில் நடிக்கத தொடங்கியுள்ளார். அதில் இவரது முதல் படமான விருமான் படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடினார். தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் ஹிட் ஆனது.
வைரல் பதிவு
இந்நிலையில், டாக்டர் படிப்பை முடித்துள்ள அதிதி தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டர் உடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் 'டாக்டர் A' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பலர் அதிதி சினிமாவை விட்டு மருத்துவராக மாறிவிட்டாரா? என்றும், சிலர் ஏதேனும் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil