ஷங்கர் பேச்சை கேட்காத மகள் - அந்த மாதிரி சீன் உள்ள படத்தில் கமிட் ஆன அதிதி!
இயக்குனர் ஷங்கரின் பேச்சை கேட்காமல் நடிகை அதிதி படத்தில் கமிட் ஆனது வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு, சினிமா மீது தனக்கு உள்ள ஆறுவத்தினால் இவர் படத்தில் நடிக்கத தொடங்கியுள்ளார். அதில் இவரது முதல் படமான விருமான் படத்தில் நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடினார். தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தற்பொழுது வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது, இதில் இவர் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் ஹிட் ஆகியுள்ளது.
பேச்சை கேட்காத மகள்
இந்நிலையில், நடிகை அதிதி அடுத்த படத்தில் தனது தந்தையான இயக்குனர் ஷங்கரிடம் கேட்காமலே கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக உறுதியாகி உள்ளது,
இந்த படத்தில் ஹீரோ முதல் படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா தான், மற்றும் ஹீரோயினாக அதிதி கமிட்டாகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் ஷங்கர் அனுமதி கொடுக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மை குறித்து அறியப்படவில்லை. தற்பொழுது இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இந்த படத்தில் அதிதி வேண்டாம் அதற்கு பதிலாக இவானாவை நடிக்க வைக்கவேண்டும் என்று கூறி வருகின்றனர்.