வந்தால் சூர்யாவின் மனைவியாக தான்.. அடம்பிடித்த அசின் - பகீர் கிளப்பிய பிரபலம்!
பிரபலம் ஒருவர் சூர்யா மற்றும் அசின் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகை அசின்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அசின். இவர் இயக்குநர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசின். அந்தப் படம் தாமதமாக நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் முதலில் வெளியானது.

பின்னர் அவர் நடித்த கஜினி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்தார் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
பிரபலம் தகவல்
இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "முதலில் சூர்யா ஜோதிகா நடிக்கும் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது . இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் இருப்பதாகவும் , ஐஷு கேரக்டரில் அசின் நடிக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ஜோதிகா நடித்த குந்தவை கேரக்டர் தனக்கு வேண்டும் என்று அசின் கூறியுள்ளார். ஆனால் அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என படக்குழுவினர் சூர்யாவிடம் தெளிவாக கூறியுள்ளனர்.
ஆனால் அந்த கேரக்டரில் தான் நடிப்பேன் என்றும், வேறு எந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என அசின் மறுத்துவிட்டார். அந்த கேரக்டரில் ஜோதிகா தான் நடிக்க வேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்ததால் , அசின் நடிக்கவில்லை. அதன் பிறகு பூமிகா அதில் நடித்தார்" என்று கூறியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு : பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil