விஜய் கரம்பிடிக்க இருந்தது இந்த பிரபலத்தின் மகளா? - ரகசியம் உடைத்த பிரபலம்!
பிரபலம் ஒருவர் நடிகர் விஜய் திருமணம் செய்ய இருந்த பிரபலம் குறித்து பேசியுள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.
விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இப்போது மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டனில் உள்ள தனது மகளை பார்த்துக்கொள்ள அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பிரபலம் தகவல்
இந்நிலையில், பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜய் திருமணம் குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் நடித்த படங்களை பார்த்து ஈர்க்கப்பட்டு சங்கீதா, அவரது அக்காவுடன் விஜயை பார்க்க நேராக விஜய் வீட்டிற்கே வந்து விட்டதாக விஜயின் தாய் ஷோபா ஒரு பேட்டியில் கூறினார்.
"ஆனால் முதலில் விஜய் திருமணம் செய்ய இருந்தது அவருடைய சொந்த தாய்மாமனான சுரேந்தரின் மகளை தான். சுரேந்தர் பிரபல பாடகர், இவர் மைக் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.
விஜயின் அம்மாவின் சொந்தத் தம்பி, அவருடைய மகளைத்தான் திருமணம் செய்ய இருந்தார், ஆனால் அதற்குள் சங்கீதாவை காதலித்ததால் மாமன் மகளை கைவிட நேர்ந்தது" என்று கூறியுள்ளார்.