ஜோதிகாவை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகர் - நெருங்க விடாமல் கூடவே சென்ற நடிகர் சூர்யா

Silambarasan Suriya Jyothika Tamil Cinema Marriage
By Thahir Mar 15, 2023 06:51 AM GMT
Report

நடிகை ஜோதிகாவை பிரபல நடிகர் ஒருவர் துரத்தி துரத்தி காதலித்தாகவும் இதனால் அந்த நடிகரை நெருங்கவிடாமல் சூர்யா பார்த்துக் கொண்டதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜோதிகா திருமணம் 

நடிகர் சிம்பு நயன்தாரா முதல் ஹன்சிகா வரை பலரையும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு, நடிகர் சூர்யாவின் மனைவியும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

A famous actor who fell in love with Jyothika

திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சிம்புவை நெருங்கவிடாமல் பார்த்து கொண்ட சூர்யா 

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஜோதிகாவின் படங்களில் நடிக்க இருந்தால் அதன் கதை மற்றும் வசனம், காட்சி உள்ளிட்டவற்றை கேட்ட பின்னர் தான் க்ரீன் சிக்னல் கொடுப்பாராம் நடிகர் சூர்யா.

இதனிடையே நடிகர் சூர்யா, ஜோதிகாவை காதலித்து வந்த நேரத்தில் ஜோதிகா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஜோதிகாவை பற்றியே புகழாரம் பாடி வந்தார்.

அந்த நேரத்தில் தான் நடிகர் சிம்பு தெளிவாக மன்மதன் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

A famous actor who fell in love with Jyothika

ஜோதிகாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதில் கொஞ்சம் கூட நடிகர் சூர்யாவுக்கு இஷ்டம் இல்லை என்று கூறப்படுகிறது.

இருந்த போதிலும் ஷுட்டிங் தொடங்கிய முதல் நாள் முதல் முடியும் நாள் வரை சூர்யா கூடவே சென்றதாகவும்,  ஷுட்டிங் நடந்த அத்தனை நாட்களும் நடிகர் சூர்யா அங்கேயே இருந்து ஜோதிகாவுடன் சிம்புவை நெருங்க விடாமல் பார்த்து கொண்டதாக கூறப்படுகிறது. சிம்பு முதன் முதலில் காதலித்த பெண் ஜோதிகா என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.