செப்.17ஆம் தேதி டாஸ்மாக் லீவ்... ஏன் தெரியுமா..?
செப்டம்பர் 17-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக்
பொதுவாகத் தேர்தல் நாட்கள், வாக்கு என்னும் நாட்கள், சுதந்திர தினம்,காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆகிய தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் 17-ஆம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி முன்னிட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்,
மாவட்ட ஆட்சியர்
அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த டாஸ்மாக் கூடங்களில் (17.09.2024) அன்று மதுபானம் விற்பனை ஏதும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
இதனால் மிலாடி நபி செவ்வாய் கிழமை அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் அதனுடன் இணைந்த மதுக்பானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (FL1 FL2 FL3 FL3A & FL11) மட்டும் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.