டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையா..? துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!

Tamil nadu DMK Durai Murugan DMDK Premalatha Vijayakanth
By Jiyath Jun 30, 2024 03:03 AM GMT
Report

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையென ஒரு மூத்த அமைச்சர் கூறுவது கிறுக்குத்தனமான செயல் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்      

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சட்ட சபையில் துரை முருகன் பேச்சை கேட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையா..? துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்! | Dmdk Premalatha Condemns Dmk Duraimurugan

துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது. "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்ட சபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குறியது.

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் - நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும் மு.க.ஸ்டாலின்

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் - நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும் மு.க.ஸ்டாலின்

கண்டனம் 

டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம்.

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையா..? துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்! | Dmdk Premalatha Condemns Dmk Duraimurugan

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல.

எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது" என்று தெரிவித்துள்ளார்.