டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம் ; காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலகுறைவு!

TASMAC Mayiladuthurai
By Swetha May 07, 2024 07:11 AM GMT
Report

மதுபான கடையில் காலாவதியான பீரை வாங்கி அருந்திய இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

காலாவதியான பீர் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள காரைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (31) மற்றும் சார்லஸ் (27). நண்பர்களான இருவரும் நேற்று மது அருந்துவதற்காக தென்னலக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக்கு சென்று உள்ளனர். அங்கு டின் பீர்களை வாங்கி அருந்திவிட்டு, இருவரும் வீடு திரும்பினர்.

டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம் ; காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலகுறைவு! | 2 Hospitalised After Drinking Expired Beer

திடீரென சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் அருந்திய பீர் காலாவதியாகி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மக்களே உஷார்...dairy milk சாக்லேட்டில் படர்ந்த பூஞ்சை - கொதித்த வாடிக்கையாளர்!

மக்களே உஷார்...dairy milk சாக்லேட்டில் படர்ந்த பூஞ்சை - கொதித்த வாடிக்கையாளர்!

உடல்நலகுறைவு

இதையடுத்து அவர்கள் அருந்திய பீர் டின்களை சோதனை செய்த போது அந்த கேன்கள் கடந்த ஜனவரி மாதமே காலாவதி ஆகிவிட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் திரண்டு தென்னலக்குடி டாஸ்மாக் கடையில் தட்டி கேட்டனர்.

டாஸ்மாக் நிர்வாகம் அலட்சியம் ; காலாவதியான பீர் அருந்திய இருவருக்கு உடல்நலகுறைவு! | 2 Hospitalised After Drinking Expired Beer

ஆனால் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.