காலாவதியான சட்னியால் வந்த வினை.. வீட்டில் முடங்கி சாவுடன் போராடிய பெண் - இவ்வளவு ஆபத்து இருக்கா?
பெண் ஒருவர் காலாவதியான சட்னியை சாப்பிட்டதால் சாவுதான் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாவதியான சட்னி
பிரேசிலில் வசிக்கும் கார்னிரோ சோப்ரேரா கோஜ் என்ற பெண், டிசம்பர் 31, 2021 அன்று சந்தையில் இருந்து பெஸ்டோ சாஸை வாங்கியுள்ளார். அந்த சட்னி நசுக்கிய பூண்டு, ஐரோப்பிய பைன் பருப்புகள், உப்பு, துளசி இலைகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்யப்படும். சிலர் ஆட்டுப்பால் மற்றும் ஆலிவ் எண்ணெயையும் இதோடு சேர்க்கிறார்கள்.
இந்த பச்சை நிற சட்னி மிகவும் சுவையாக இருக்கும். அந்த பாட்டிலில் காலாவதி தேதி இல்லை அதோடு அவள் கடையில் அடிக்கடி வாடிக்கையாளராக இருந்ததால், அதை எப்படி சேமிக்க வேண்டும் என்று கடைக்காரரும் சொல்லவில்லை.
சில வாரங்கள் கழித்து ஜனவரி 2022க்கு பின் அதன் நிறமும் தரமும் பார்ப்பதற்கு நன்றாக இறந்தவுடன் அதை எந்த யோசனையும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டார்.
சாவுடன் போராட்டம்
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைய ஆரம்பித்தது, அவரே வண்டியை 20 கிலோமீட்டர் ஓட்டி மருத்துவமனையை அடைந்துள்ளார். பின்னர் வாந்தி எடுக்க ஆரம்பித்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவளால் கை கால்களை அசைக்கக்கூட முடியவில்லை. எதையும் சொல்வதில் சிரமம் இருந்தது. நாக்கில் கூச்ச உணர்வு ஏற்பட ஆரம்பித்தது.
டாக்டர்கள் உடனடியாக அவரை ஸ்கேன் செய்தனர். உடலின் பல பாகங்கள் வேலை செய்யாமல் இருப்பது தெரிய வந்தது. அப்பொழுது தான் இவர் போட்யூலிசம் என்ற அரிய தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது பொதுவாக உணவு விஷத்தால் ஏற்படுகிறது, சக்தி வாய்ந்த பாக்டீரியாக்கள் உடலின் நரம்புகளைத் தாக்கி, சுவாசிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தசைகள் தளர்வடைய செய்து இது பக்கவாதத்தையும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.
மருத்துவர்கள் அவருக்கு போட்யூலிசம் எதிர்ப்பு மருந்தைக் கொடுத்தனர், அதன் பிறகு தான் அவரால் பேச முடிந்தது. ஆனால் ஒரு ஆண்டு அவர் சாவுடன் போராடினார்.