மக்களே உஷார்...dairy milk சாக்லேட்டில் படர்ந்த பூஞ்சை - கொதித்த வாடிக்கையாளர்!
டெய்ரி மில்க் புதிய சாக்லேட்டில் பூஞ்சையை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
சாக்லேட்
டெய்ரி மில்க் சாக்லேட்டுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வயது வித்தியாசமின்ரி இதை ருசித்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் காதலர்கள் மத்தியில் டெய்ரி மில்க் சாக்லேட் என்பது ஒரு முக்கிய ஒன்றாகும்.இதனால் சாக்லேட் நிறுவனங்கள் காட்டில் எப்போதும் வருவாய் மழை குறையாது இருக்கிறது.
இது போல ஒரு சில இனிப்பான நேரங்களுக்கு சாக்லேட் நாடும் வாடிக்கையாளர்களுக்கு, சில சமயங்களில் கசப்பான அனுபவங்கள் தான் கிடைக்கிறது. அந்த வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், புதிதாக வாங்கிய சாக்லேட் பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் இன்னமும் காலாவதி தேதியை எட்டாத அந்த பாக்கெட்டை பிரித்தால் உள்ளே பூஞ்சை படர்ந்து இருந்தது. இதனால் கடுப்பான அந்த வாடிக்கையாளர் இதை பற்றி பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினார். எனவே கெட்டுப்போன அந்த சாக்லேட்டின் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
பூஞ்சை
அதில், “இந்த சாக்லேட் உற்பத்தி நாள் ஜனவரி 2024 என உள்ளது. இதிலிருந்து ஒரு வருடத்தின் முடிவில்தான் சாக்லேட் காலாவதியாகும். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே இப்படியாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் இதற்கு கீழ்,தங்களுக்கும் அம்மாதிரியான கசப்பான அனுபவங்கள் நேரிட்டிருப்பதாக அவர்களும் புலம்பினர்.இன்னும் சிலர் உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் பரிந்துரை செய்தனர்.
விவகாரம் பெரிதாவதை உணர்ந்த சாக்லேட் நிறுவனம் தனது வாடிக்கையாளாரின் மோசமான அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், “மிக உயர்ந்த தரத்தையே பராமரிக்க முயற்சிக்கிறோம். எனினும் நீங்கள் விரும்பத்தகாத அனுபவத்தைப் பெற்றதற்காக வருந்துகிறோம்” என்று வருத்தம் தெரிவித்திருந்தது.