ஆசையாய் வாங்கிய சாக்லேட்டில் நெளிந்த புழு - பொதுமக்களே உஷார்..!
உளுந்தூர்பேட்டையில் மளிகை கடையில் வாங்கிய டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாக்லெட்டில் நெளிந்த புழு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அருண் இவர் இன்று ஒரு மளிகை கடையில் ரூபாய் 85 மதிப்பிலான டைரி மில்க் சாக்லேட்டை வாங்கியுள்ளார்.
தொடர்ந்து வீட்டிற்கு சென்று சாக்லேட்டை சாப்பிடுவதற்காக அதை திறந்து பார்த்தபோது சாக்லேட்டின் உள்ளே மூன்று புழுக்களும் , கழிவு பொருட்களும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார் டைரி மில்க் சாக்லேட் காலாவதி தேதி செப்டம்பர் 2023 என்று அந்த சாக்லேட்டில் இருந்தாலும் அந்த சாக்லேட்டில் புழுக்கள் இருந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.