தொடரும் பணவீக்கம் ? - பால் பொருட்களின் விலையினை உயர்த்திய அமுல்

Milk
By Irumporai Aug 16, 2022 09:51 AM GMT
Report

நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் பால் விலையினை பாதித்துள்ளது , இந்த நிலையில் அமுல் நிறுவனம் பால் விலையினை அதிகரித்துள்ளது.

அமுல் விற்பனை

மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களான ஜிஎஸ்டி வரி 5% விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  ஜூலை 18ஆம் தேதி முதல் தனியார் நிறுவன பால் பொருட்கள் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி் விற்பனை செய்து வருகிறது.

இரண்டு ரூபாய் உயர்வு

இந்த நிலையில்,அமுல் பால், லிட்டருக்கு விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் பால் விலை லிட்டருக்கு ரூ .2 ஆக அதிகரித்துள்ளது.

தொடரும் பணவீக்கம் ? - பால் பொருட்களின் விலையினை உயர்த்திய அமுல் | Amul Dairy Milk Hike By Rs 2 Per Litr

லிட்டருக்கு 2 ரூபாய் விலையேற்றம் என்பது சில்லறை விற்பனையில் MRP விலை லிட்டருக்கு 4 சதவீத உயர்வு எனவும், இது பணவீக்க சராசரியை விடக் குறைவுதான் எனவும் அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பால் விலை உயர்வு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும் பால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.