செந்தில் பாலாஜி ComeBack கொடுத்துள்ளார்; இனி.. அதுமட்டும் உறுதி - மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் செந்தில் பாலாஜி தடைகளை உடைத்து மீண்டு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பேச்சு
கோவை, காந்திபுரம் அனுப்பர்பாளையத்தில் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இது 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
செந்தில் பாலாஜியின் செயல்பாடு
டைடல் பார்க் அருகில் மேலும் ஒரு தகவல் தொழில் பூங்கா அமைக்கப்படும். அவினாசி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீடிக்கப்படும். தொண்டாமுத்தூர் பகுதியில் 10 கி.மீ. யானை புகாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை பார்த்து தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார். "ComeBack கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி”. தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவார். அது உறுதி எனப் பேசியுள்ளார்.