சங்பரிவார் ஸ்டாலின் அரசே; கட்டப்பஞ்சாயத்துக்காரரான முதலமைச்சர் - ஜெயக்குமார் கடும் விமர்சனம்
தேர்தல் நேரத்தில் தான் பட்டியலின மக்களின் நியாபகம் வருமா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுவன் மீது தாக்குதல்
திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாட்டத்தில் ஒரு கும்பல் வீடு புகுந்து 17 வயது சிறுவனை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.
விசாரணையில், தன் மீது மோதும் நோக்கில் காரில் வேகமாக சென்றவர்களை கேள்வி கேட்டதற்காக, சிறுவனை வீடு புகுந்து தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார்
இந்த வழக்கில் சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, சாதி ரீதியாக திட்டுதல் உட்பட 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிறிய வயதுள்ள ஒரு சிறுவனை சாதியை வைத்து தாக்கும் அவலத்தை ஆட்சியாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்?
சாதிய வன்கொடுமை
வேங்கைவயல் நாற்றம் இன்னும் வீசி கொண்டிருக்க,நெல்லையில் சிறுவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் என இன்னும் எத்தனை அவலங்கள் காத்திருக்கிறது?
திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!
— DJayakumar (@djayakumaroffcl) November 5, 2024
சிறிய வயதுள்ள ஒரு சிறுவனை சாதியை வைத்து தாக்கும் அவலத்தை ஆட்சியாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்?
வேங்கைவயல் நாற்றம் இன்னும் வீசி கொண்டிருக்க,நெல்லையில் சிறுவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் என இன்னும் எத்தனை… pic.twitter.com/3yxw1zdnsx
கூட்டணி கட்சியினரை கட்டுபடுத்தியும்,குரலெழுப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்தும் முழு கட்டப்பஞ்சாயத்துக்காரராக மாறியுள்ள மக்கள் விரோத அரசின் முதலமைச்சர் அவர்களே, தேர்தல் நேரத்தில் தான் பட்டியலின மக்களின் நியாபகம் வருமா? என தெரிவித்துள்ளார்.