அந்த நிறுவனத்திற்காக அம்மா குடிநீர் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் - ஜெயக்குமார்

Udhayanidhi Stalin M K Stalin Durai Murugan D. Jayakumar
By Karthikraja Jul 23, 2024 08:30 PM GMT
Report

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

admk jayakumar latest press meet

இதில் அவர் பேசியதாவது, திமுக அரசு 3 ஆண்டுகளில் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முதல் தடவையாக 30 சதவீதமும், 2ம் முறையாக 5சதவீதமும், 3ம் முறையாக 4 சதவீதமும் உயர்த்துவதாக சொல்லி ஏறக்குறைய 50 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 

மத்திய பட்ஜெட் 2024; AA க்கு மட்டுமே பலன் தரும் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட் 2024; AA க்கு மட்டுமே பலன் தரும் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மின் கட்டணம்

பொதுவாக மின்சார வாரியம் லாப நோக்குடன் செயல்படும் நிறுவனம் இல்லை. அது ஒரு சேவை நிறுவனம். எங்கள் ஆட்சியில் கூட நஷ்டம் வந்த போது, அந்த நஷ்டத்தை சரி கட்ட அரசு மானியம் வழங்கும். இது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த அரசு 50 சதவீதம் அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி, பல சிறு குறு நிறுவனங்களை செயலற்ற நிலைக்கு கொண்டு போய் உள்ளது. 

admk jayakumar latest press meet

சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது. தற்போது தேர்தல் முடிந்ததும் மின் கட்டண உயர்வு இதற்கு பிறகு பேருந்தை கட்டணத்தை உயர்த்த உள்ளார்கள். என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை என்ற சர்வாதிகார போக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே கழக பொதுச்செயலாளர் உத்தரவில் அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

அம்மா உணவகம்

அம்மா உணவகம் ஒரு உன்னதமான திட்டம். ரூ15 மூலம் ஒரு நாள் 3 வேளையும் அங்கு உணவு உண்ணலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு வந்த உடன் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது. எத்தனை முறை மேயர் அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்? லேப்டாப் ஏன் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

மேலும், மேல்மட்ட குடும்பத்தில் ஒருவர் தண்ணீர் கம்பெனி வைத்துள்ளார். அணைத்து பேருந்து நிலையங்களிலும், மீட்டிங்கிலும் அந்த குடிநீர் தான் இருக்கும். அந்த நிறுவனத்திற்காக அம்மா குடிநீர் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.

துணை முதல்வர்

அரசு ஊழியர் கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் ல் அரசு ஊழியர்கள் இணையலாம் என அறிவித்தது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் இல் இணைந்தால் தான் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் என்ற சூழ்நிலையை அரசு உருவாக்க முயல்கிறது.

துரைமுருகன் அண்ணா காலத்தில் இருந்து கட்சி பணியாற்றுகிறார். கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர் எனவே அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கலாம். இன்பநிதிக்கு தேர்தலில் நிற்கும் வயது இருந்தால் அவரையும் துணை முதல்வர் ஆக்கியிருப்பர் ஸ்டாலின்.

இப்பொழுது உதயநிதி நிழல் முதல்வராக உள்ளார். ஸ்டாலினின் மகன் என்பதை தவிர அவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை. பாராளுமன்றத்தில் உதயநிதி புங்கள் பாடி விட்டு தான் உறுதி மொழி எடுக்கிறார்கள். அளவுக்கு பதவிக்காக தன்மானதை இழக்கிறார்கள். என பேசியுள்ளார்.