ஐசியூவில் செந்தில் பாலாஜி; மோசமான உடல்நிலை - வழக்கில் ஜாமீன் கிடைக்குமா?
செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜாமீன் கிடைக்க வாய்ப்பு?
அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு நிராகரிக்கப்பட்டநிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடாக புதிய மனு தாக்கல் செய்யப்படுகிறது.
அவரின் உடல்நிலை மோசமாகி உள்ள நிலையில், இன்றைய விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.