சிறையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடல்நலக்குறைவு
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்படுவார் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.