அந்த வாட்ச் வெகுமதியா செந்தில் பாலாஜி தான் கொடுத்தாரே? குண்டை தூக்கி போட்ட பாஜக நிர்வாகி

V. Senthil Balaji Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Jul 21, 2024 06:42 AM GMT
Report

 அண்ணாமலை - செந்தில் பாலாஜிக்கு மத்தியில் ஏற்பட்ட மோதலை குறித்து தனியாக பேசி தெரிய வேண்டிய அவசியமில்லை.

இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் சரமாரி தாக்குதல்களை வைத்து வந்தார்கள். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பிறகு, இந்த கருத்துக்கள் மெல்ல குறைந்து விட்டன.

Senthil balaji annamalai

செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் தொடர்ந்து வைத்த கேள்விகளில் ஒன்று அவரின் ரபேல் வாட்ச் குறித்தே. இந்த நிலையில் தான், கட்சியில் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் கல்யாணராமன் ரபேல் வாட்ச் விவகாரத்திலும் தலையிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி தான் கொடுத்தாரே

அவரின் எக்ஸ் தளபதிவு வருமாறு,

அந்த Rafale 6 லட்சம் வாட்ச் 17-18 ADMK /TTV Group எம் எல் ஏக்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தனது உறவினராகிய அண்ணாமலை வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக செந்தில் பாலாஜியால் 2017ல் சுயமாக வழங்கப்பட்ட வெகுமதி . அதனால தான் அந்த ஆளுக்கு அண்ணாமலையிடம் வாட்ச்சின் பில் இல்லை என்பதும் தெரியும்.

BJP Kalyanaraman

அதை தரமுடியாது என்பதும் தெரியும். கொடுத்தவனே கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய அண்ணாமலை அடுத்தவன் கட்டி இருந்த வாட்ச்சை விலை கொடுத்து வாங்கியதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பதில் சொல்ல 100 நாட்கள் ஆனதன் ரகசியம் இதுதான். மொத்தத்தில் நான் ஒரு கிளீன் ஆபிசர் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது எல்லாம் பொய்.

செந்தில் பாலாஜி கைது ஒன்னுமில்ல.. அடுத்து இவருக்கு இருக்கு - மிரட்டும் அண்ணாமலை..!

செந்தில் பாலாஜி கைது ஒன்னுமில்ல.. அடுத்து இவருக்கு இருக்கு - மிரட்டும் அண்ணாமலை..!

(பொதுவாக எந்த மடையனும் 2016ல் விற்று தீர்ந்துவிட்ட ஒரு வாட்ச்சை தேடி, அதை 2021ல் அதுவும் உடலுடன் ஒட்டி உறவாடும் ஒரு பொருளை second hand பொருளாக வாங்கமாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும். தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் முட்டாளுக்குத் தெரியாது).