செந்தில் பாலாஜி கைது ஒன்னுமில்ல.. அடுத்து இவருக்கு இருக்கு - மிரட்டும் அண்ணாமலை..!
அமைச்சர் மூர்த்தியின் கைது குறித்து நடைப்பயணத்தின் போது அண்ணாமலை பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செந்தில் பாலாஜி
மின்வாரிய துறை அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி, 2015-ஆம் ஆண்டில் எழுந்த புகார்களின் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இதில் பாலாஜியின் கைதும், அதனை தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை விட இந்த அமைச்சரின் கைது தான் பெரிதாக இருக்கும் என தற்போது பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமைச்சர் மூர்த்தி
தமிழகத்தின் தற்போதைய வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரை சட்ட அமைச்சராக இருக்கும் மூர்த்தி குறித்து மதுரை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது, அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான்.
மூர்த்தி அண்ணணுக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். நான் எதாவது சொல்லி நடந்து விட்டால் பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்று என்பார்கள்.
சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.