1ம் நம்பர் படிச்ச முட்டாள் அண்ணாமலை - சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

V. Senthil Balaji Tamil nadu BJP K. Annamalai
By Sumathi Jun 18, 2022 03:08 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்தித்தார்.

1ம் நம்பர் படிச்ச முட்டாள் அண்ணாமலை - சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி! | Senthil Balaji About Annamalai Questions

இந்த ஓராண்டில் மட்டும் 198 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மாநகராட்சி கோவிலில் நடைபெற்று வருவதாகவும் , கடந்த வாரத்தில் 113 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்,

கூடுதல் நிதி

இன்று 38 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநகராட்சி விடுபட்ட சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டு, கூடுதல் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1ம் நம்பர் படிச்ச முட்டாள் அண்ணாமலை - சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி! | Senthil Balaji About Annamalai Questions

கோவை மாநகராட்சி பொருத்தவரை அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட சாலைகள் முதல்வரின் ஆட்சியில் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

வேலை வெட்டி இல்லாதவர்

அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது எனவும் வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர்கள் ஏன் அரவகுறிச்சியில் மண்ணை கவ்வினார், ஏன் மக்கள் விரட்டியடித்தார்கள் என கேள்வி கேட்ட செந்தில் பாலாஜி, நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இப்போது கூட எடுக்கலாமே?

நிலக்கரி இறக்குமதி

நாங்கள் வேண்டாம் என்றா கூறுகிறோம் எனக்கேட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாரே எங்கிருந்து வந்தது?

காவல்துறையில் சம்பளம் வாங்கி சம்பளத்தை சேர்த்து வைத்து, அல்லது ஆடு மாடு மேய்த்து சேர்த்து வைத்தா வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் 143 கோடி டாலருக்கு நிலக்கரி குறைவான விலையில் நாங்கள் வாங்கியிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது எனகேட்ட அமைச்சர்,

நிலக்கரி குறைவான அளவு இறக்குமதி செய்யும்போது கூட தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவித்துள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

படிச்ச முட்டாள்

வரும் நாடாளுமன்றத் தேர்தல் முதல்வர் அறிவிக்கும் 39 வேட்பாளர்களும் மக்கத்தான வெற்றியை பெறுவார்கள் எனவும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நீதிமன்றத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண், அணிலால் உயிரிழந்தாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய செந்தில்பாலாஜி,

இதுபோன்று வன உயிரினங்களால் மின்வெட்டு ஏற்படுமா ஏற்படாதா என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பினார்.

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உள்ளது எனவும் நாங்கள் மக்களுக்கு வேலை செய்கிறோம் எனவும் அண்ணாமலை வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார் எனவும் மட்ட ரகமான அரசியல்வாதிக்கு,

தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்குப் பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்க வேண்டாம் எனவும் விமர்சித்தவர், ஒன்னாம் நம்பர் படிச்ச முட்டாள் என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் - தனியரசு பரபரப்பு பேட்டி