ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்த மூத்த வழக்கறிஞர் 'ஃபாலி நாரிமன்' காலமானார்!

India Supreme Court of India Death
By Jiyath Feb 21, 2024 05:57 AM GMT
Report

சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

ஃபாலி நாரிமன் மறைவு

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கியவர் ஃபாலி நாரிமன். தனது 22 ஆண்டுகால பயிற்சிக்கு பிறகு கடந்த 1971-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்த மூத்த வழக்கறிஞர்

மேலும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் ஃபாலி நாரிமன் தனது 95 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இவர்1972 முதல் 1975 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்துள்ளார். மேலும், 1999 முதல் 2005 வரை ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகவரை இருந்தார்.

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல் - கதறி அழும் Video வைரல்!

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல் - கதறி அழும் Video வைரல்!

விருதுகள் 

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்குகள் மற்றும் அவர் பல முன்னணி தலைவர்களின் வழக்குகளை ஃபாலி நாரிமன் வாதிட்டுள்ளார். அந்தவகையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் இவரின் ஆஜரானார்.

ஜெயலலிதாவை ஜாமீனில் எடுத்த மூத்த வழக்கறிஞர்

இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமனுக்கு 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.