தன்னுடைய கொலை வழக்கில் ஆஜரான சிறுவன் - உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!
கொலை வழக்கு ஒன்றில் கொல்லப்பட்ட சிறுவனே நீதிமன்றத்தில் ஆஜரானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விசித்திர வழக்கு
உத்திர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கொலை வழக்கு ஒன்று பதிவானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபய் சிங் என்ற 11 வயது சிறுவனை, அவரின் தாத்தா மற்றும் மாமா ஆகியோர் சேர்ந்து கொலை செய்து விட்டதாக, சிறுவனின் அளித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது, சிறுவன் அபய் சிங் அலகாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நான் உயிருடனேயே இருக்கிறேன் என கூறியுள்ளான். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.
இதனால், உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதும் சிறுவன் நேரில் ஆஜராகி உள்ளார். இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், உத்தர பிரதேச அரசு, பிலிபித் போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் நியுரியா காவல் நிலைய உயரதிகாரி ஆகியோரிடம் இருந்து விளக்க அறிக்கைகளை கேட்டுள்ளது. மேலும், அடுத்த உத்தரவு வரும்வரை சிறுவன் மற்றும் அவனுடைய தாத்தாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது.
விசாரணை
இது தொடர்பாக அபய் சிங் நீதிமன்றத்தில் கூறியதாவது "தாத்தா, பாட்டியுடன் பாதுகாப்பாக வசித்து வருகிறேன். போலீசார் எங்களுடைய வீட்டுக்கு வந்து, அவர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
நான் அவர்களுடனேயே வசிக்க விரும்புகிறேன். அதனால், இந்த வழக்கை முடிக்கவும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், வரதட்சணை கேட்டு அபயின் தாயாரை, தந்தை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், 2013ம் ஆண்டு முதல் தாத்தாவுடன் சிறுவன் அபய் வசித்து வருகிறான்.
அபயின் தாயார் மரணம் அடைந்ததும், தந்தைக்கு எதிராக தாத்தா புகார் அளித்திருக்கிறார். இதற்கு பழி வாங்கவே அபயை கொலை செய்து விட்டனர் என அபயின் தந்தை குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வருகிற ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.