லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல் - கதறி அழும் Video வைரல்!

Viral Video India Telangana
By Jiyath Feb 21, 2024 04:32 AM GMT
Report

 ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். 

லஞ்சம் பெற்ற அதிகாரி 

தெலுங்கானா மாநிலத்தில் அரசு கட்டுமான பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருபவர் ஒப்பந்ததாரர் கங்காதர். இவர் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட அரசு ஆண்கள் விடுதிக்கான நிலுவைத் தொகையை வழங்குமாறு, ஹைதராபாத் எஸ்டி நலப்பிரிவு வாரியத்தில் செயற்பொறியாளராக உள்ள ஜகஜோதியிடம் கேட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல் - கதறி அழும் Video வைரல்! | Woman Officer Arrested For Taking A Bribe

அதற்கு, 2 டெண்டர்கள் எடுத்த காரணத்தால் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் பில் தொகையை வழங்குவேன் என ஜகஜோதி கூறியுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் கங்காதர புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரூ.1 லட்சத்தை சற்று குறைக்குமாறு ஜெகஜோதியிடம், கங்காதர கேட்கவே ரூ.84,000 வழங்குமாறு அவர் கூறியுள்ளார்.

அதிரடி கைது 

பின்னர் அந்த லஞ்ச பணத்தை பெறும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜகஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி; 4 கிலோ தங்கம், ரூ.65 லட்சம் பறிமுதல் - கதறி அழும் Video வைரல்! | Woman Officer Arrested For Taking A Bribe

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.65 லட்சம் ரொக்கம், 3.64 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், சில சொத்து ஆவணங்களையும் ஜெகஜோதியிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு ரூ.15 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஜெகஜோதியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை ஹைதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதிகாரிகளிடம் சிக்கியபோது அவர் கதறி அழுத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.