இலவச Wifi முதல் அனைத்து வசதிகளுடனும் தமிழ்நாடு அரசு பணிபுரியம் மகளிர் விடுதிகள் - எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி
வேலைக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் ஏராளம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் பெண்கள் வெவ்வேறு இடங்களுக்கு வேலைக்காக செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்குவதற்கு ஒரு இடம் அமைவதில்லை.
அப்படி அமைந்தால் பாதுகாப்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு இருந்தால் வாடகை அதிகமாக இருக்கும். அவர்கள் சம்பாதிப்பதில் பகுதி பணம் அதற்கே செலவாகி விடுகிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக வந்திருக்கிறது தமிழக அரசின் "தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி".
இத்திட்டத்திற்கான மதிப்பு 16.5 கோடியாகும். இந்த திட்டத்தின் கீழ் அடையாறு, திருச்சி, கூடுவாஞ்சேரி, விழுப்புரம், வேலூர்,பெரம்பலூர்,தஞ்சாவூர்,திருநெல்வேலி,சேலம் ஆகிய இடங்களில் 684+ படுக்கை வசதிகளுடன் விடுதிகள் கட்டப்படவுள்ளது . முதல் படியாக கூடுவாஞ்சேரியிலும், திருச்சியிலும் உள்ள விடுதிகளை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை அடையாறு உள்ளிட்ட இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார் .
விடுதிகளின் சிறப்புகள்
பயோ மெட்ரிக் ( Bio Metric) உள்நுழைவு, 24 மணி நேர பாதுகாப்பு வசதி, முழு நேர சிசிடிவி கண்காணிப்பு,இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி, பொழுதுபோக்கு அரை, சுதித்தீகரிக்கப் பட்ட குடிநீர், வைஃபை (Wifi) வசதி, பகல் நேர குழந்தைகள் காப்பகம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் என பல்வேறு வசதிகள் இந்த விடுதிகளில் செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இந்த விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம்.