பிரியாணிலாம் நல்லா இருந்துதா? கிளம்புங்க.. பாகிஸ்தானை கலாய்த்த வீரேந்திர சேவாக்!
பாகிஸ்தான் வீரர்களை, விரேந்திர சேவாக் கலாய்த்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில், அந்த அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் அந்த அணி தோல்வியையே சந்தித்தது.
இருப்பினும், நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற முயற்சித்தது. ஆனால், அதில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி கனவை கலைத்தது.
கலாய்த்த சேவாக்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியாவில் பிரியாணி மற்றும் எங்களது உபசரிப்பு எல்லாம் நன்றாக இருந்தது என்று நம்புகிறோம். உங்கள் நாட்டிற்கு விமானம் ஏறி செல்லுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வந்தடைந்ததும் ஹைதராபாத் நகரில் தங்கி ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டது மட்டுமின்றி பலவகையான உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.