இந்த உலககோப்பையில் இந்தியா'வ யாராவது தோற்கடிங்க!! கெஞ்சும் பாகிஸ்தான் வீரர்!!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் முறையே 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளன.
இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளை தோற்கடித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி வெற்றிப் பயணத்தை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
யாராவது தோற்கடிக்கவேண்டும்
தனது சமீபத்திய யூடியூப் வீடியோவில் ரமீஸ் ராஜா பேசும் போது, இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா பவர்பிளேயில் 140க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார் என சுட்டிக்காட்டி, அவர் ஏற்கனவே பவர்பிளேயில் ஒன்பது சிக்சர்களை அடித்துள்ளார் என்று தெரிவித்தார்.
[INA747}
இந்தியாவும் வலுவான நடுத்தர பேட்டர்களை கொண்டுள்ளது என குறிப்பிட்ட ரமீஸ் ராஜா, இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும், யாரோ ஒருவர் இந்திய அணியை தோற்கடித்து விளையாட வேண்டும் என்று கூறினார்.
விராட் கோலி மிரட்டுகிறார்
இந்த உலகக் கோப்பையில் இந்தியாவைத் தவிர எந்த அணியும் இதுவரை ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறி, இந்திய அணியின் முதல் நான்கு அல்லது ஐந்து பேட்டர்களின் ரன் சராசரி 50-க்கு அருகில் உள்ளது என்பதை தெரிவித்தார்.
சிக்ஸர்களை அடிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இந்திய அணி டாப் ஆர்டர் உள்ளது என்று கூறி, ஸ்ட்ரைக் ரேட்டும் விளையாடும் தரமும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். விராட் கோலி சேசிங் செய்வதை விரும்புகிறார் என கூறி, பங்களாதேஷின் பந்துவீச்சு சவாலாக இருக்காது என்றாலும் சதம் என்றால் சதம் என்ற ரமீஸ் ராஜா, விராட் கோலி களத்தில் இருப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது" என்றார்.