இது மோடிக்கும் ஸ்டாலினுக்கும் அடிக்கப்பட்ட மொட்டை - சீமான்
2026 தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை அரசு மொட்டை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, இதே போல் மலையாளிக்கோ, கன்னடனுக்கோ, பீஹாரிக்கோ, குஜராத்திக்கோ மொட்டை அடிக்கப்பட்டிருந்தால் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா?
தமிழக மீனவர்கள்
தமிழர்கள் என்பதால் கேட்க நாதியில்லை. ஒருநாள் நான் முதல்வர் பதவியில் உட்காரும் போது எனது மீனவரை தொட சொல்லுங்கள் நான் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன்.
மொட்டையடிக்கப்பட்டால் பதவி விலகி விடுவேன். எல்லை தாண்டுவது தமிழக மீனவர்கள் மட்டுமா? கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இல்லையா? அப்போ இலங்கை அரசுக்கு பிரச்சினை என்பது மீனவர்கள் இல்லை. தமிழர்கள் என்பதுதான் பிரச்சினை.
கூட்டணி
இந்த மொட்டை தமிழக மீனவர்களுக்கு மட்டும் அடிக்கப்பட்ட மொட்டை அல்ல. இந்திய அரசிற்கு அடிக்கப்பட்ட மொட்டை. குறிப்பாக இந்திய பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அடிக்கப்பட்ட மொட்டை.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். எங்களை நம்பி கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம் என தெரிவித்துள்ளார்.