சிறைத்துறை கொடூரம்; மொட்டை அடித்து; கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!
இலங்கையில் தமிழக மீனவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், கணேசன், சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள்
இரண்டாவது முறையாக கைதாகி 6 மாத சிறை, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அபராதத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி,
சிறைத்துறை கொடுமை
இலங்கை சிறைத்துறை போலீசார் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், சிங்கள கைதிகள் பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்ய வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் இதனை வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதன்பின் இலங்கை அரசின் தொடர் அத்துமீறல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசியுள்ள மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ”இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.