தமிழகம் வந்த சீனா பூண்டு; உயிருக்கே ஆபத்தாம்.. எப்படி அடையாளம் காண்பது?

Garlic Tamil nadu China
By Sumathi Sep 15, 2024 05:07 AM GMT
Report

சீனா பூண்டை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

சீனா பூண்டு

சீனாவில் விளைவிக்கப்படும் பூண்டு உடல்நலத்துக்கு அதிக கேடு விளைவிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. காரணம் அங்கு விவசாயத்தில் பின்பற்றப்படும் உயர்ரக தொழில்நுட்ப முறை தான்.

chinese garlic

பூண்டு விளைச்சலுக்கு அதிக அளவிலான ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டின் பூண்டுக்கு கடந்த 2014ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

கிலோ பூண்டு விலை இவ்வளவா? வரலாறு காணாத உயர்வு - முருங்கை அதுக்கு மேல..

கிலோ பூண்டு விலை இவ்வளவா? வரலாறு காணாத உயர்வு - முருங்கை அதுக்கு மேல..

எப்படி கண்டறியலாம்?

இருப்பினும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கண்டெய்னர் மூலம் குஜராத் மாநிலத்துக்கு சீனா பூண்டு வந்துள்ளது. இதனால், ராஜ்கோட்டில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் சீனா பூண்டு விற்பனையை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகம் வந்த சீனா பூண்டு; உயிருக்கே ஆபத்தாம்.. எப்படி அடையாளம் காண்பது? | Banned Chinese Garlic Come To Tamil Nadu

தற்போது அங்கிருந்து தமிழகம் உள்பட பல இடங்களுக்கு இந்த சீனா பூண்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் சில விஷயங்களை வைத்து எளிதாக அடையாளம் காணலாம். சீனா பூண்டு அளவில் சிறியதாகவும், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.