கிலோ பூண்டு விலை இவ்வளவா? வரலாறு காணாத உயர்வு - முருங்கை அதுக்கு மேல..
பூண்டின் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து விற்பணையாகி வருகிறது.
பூண்டின் விலை
பருவமழை காரணமாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சலில் மாற்றம் காணப்பட்டது. இதனால், வெங்காயத்தின் விளைச்சலும் வெகுவாக குறைந்தது.
அதன் அடிப்படையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதே வேகத்தில் விலை குறைந்து ரூ.10ஆக விற்பனையானது. ஆனால், பூண்டின் விலை உயர்ந்து விட்டது.
உயர்வு
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும், வழக்கத்துக்கு மாறாக, பூண்டு வரத்து குறைந்துவிட்டது. இந்நிலையில், ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாயை எட்டியுள்ளது.
உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது. முன்னதாக, 1 கிலோ பூண்டு வெறும் ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது, 10 மடங்கு வரை விலை எகிறிவிட்டது. மேலும், இஞ்சி 105 ரூபாய், ஊட்டி கேரட் 80 ரூபாய், அவரைக்காய் 30 ரூபாய், பச்சை மிளகாய் 30, தக்காளி 30 ரூபாய், சின்ன வெங்காயம் 30 ரூபாய்,
பீன்ஸ் 30 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய், வெங்காயம் கிலோ 20 ரூபாய், முள்ளங்கி 20 ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
குறிப்பாக, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.