Friday, Jul 25, 2025

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி; இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான் பேட்டி!

Naam tamilar kachchi Tamil nadu Thoothukudi Seeman
By Jiyath a year ago
Report

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி என்றும் இந்தியா கூட்டணி தொடர்ந்து நீடிக்காது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி; இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான் பேட்டி! | Seeman Says India Alliance Will Not Last I

இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அதில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பிரசாரங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் "பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்.

அண்ணனுக்கு உறுதுணையாக நிற்க விஜய் கட்சி தொடங்கியிருக்கலாம் - சீமான் பேட்டி!

அண்ணனுக்கு உறுதுணையாக நிற்க விஜய் கட்சி தொடங்கியிருக்கலாம் - சீமான் பேட்டி!

கூட்டணி நீடிக்காது

இதனால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். பா.ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை துண்டு, துண்டாக உடைத்து விடும்.

பாராளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி; இந்தியா கூட்டணி நீடிக்காது - சீமான் பேட்டி! | Seeman Says India Alliance Will Not Last I

இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது. நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை. உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை.

கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் விருப்பு, வெறுப்புக்கு பொருத்தி பார்க்க வேண்டாம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக மாறுதல் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.