விக்னேஷ் சிவன், பிரதீப் படத்தில் சீமான் - தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!
விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்திற்கு ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சீமான்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றதாகவும், இதில் விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக சீமான் தாடியுடன் இருப்பதற்கு காரணம் இந்த கதாபாத்திர தோற்றம் தான் எனவும் கூறப்படுகிறது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil