லேட் தான் ஆனா கரெக்ட்டான முடிவு...அதிமுக பாஜக கூட்டணி முறிவு...சீமான் வரவேற்பு..!

Naam tamilar kachchi ADMK BJP Seeman D. Jayakumar
By Karthick Sep 19, 2023 05:03 AM GMT
Report

நேற்று அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் கூட்டணியில் பாஜக இல்லை என கூறிய நிலையில், அதனை நாம் தமிழர் சீமான் வரவேற்றுள்ளார்.

சீமான் வரவேற்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என குறிப்பிட்டு, மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு என பதிவிட்டுள்ளார். காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான் என பதிவிட்டு அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே என குற்றம்சாட்டி இருக்கின்றார்.


பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் கூட்டணி அமையுமா..?

முன்னதாக அண்ணா மற்றும் பெரியாரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக முன்னனி தலைவரான ஜெயக்குமார், கண்டனம் தெரிவிப்பட்டநிலையிலும், தொடர்ந்து அதே போக்கை அண்ணாமலை கடைபிடித்து வரும் காரணத்தினால், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என அதிரடியாக தெரிவித்தார்.

seeman-happy-for-admk-breaking-bjp-alliance

இந்த தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில், ஆனால் நேற்று ஜெயக்குமார் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திடுமா என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகின்றது.