ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நான்தான் - சீமான் ஆவேசம்!
நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ 50 ஆயிரம் கொடுத்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
2012ல் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த விசாரணை தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், ஒரு நடிகை , ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் புகார் கூறிவிட்டாலே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா?
எனக்கு திருமணம் ஆகும்போது அதை அந்த நடிகை நிறுத்தி இருக்கலாம். எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே? நான் அவருக்கு 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தேனாம். அப்படியென்றால் ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன்நான்தான்.
சீமான் ஆவேசம்
அதுவும் சிறையில் இருந்தபடியே கட்டாய கருக்கலைப்பு செய்ய முடியுமா? நானே தெருக்கோடியில் நின்னுக்கிட்டு இருக்கேன். இதுல நடிகைக்கு கொடுக்க என்கிட்ட எங்க 2 கோடி ரூபாய் இருக்கு? ஒரு முறை வாழறதுக்கு வழியில்லை, நான் இறந்துடுவேன், எனக்கு உதவி செய்ங்கன்னு ஒரு ஆடியோவை நடிகை 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார்.
அது கூட எனக்கு அனுப்பவில்லை. என் வீட்டில் வேலை செய்த ஒருவர் மூலமாக உதவி கேட்டார். அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என 2- 3 மாதங்களுக்கு கொடுக்குமாறு உதவினேன். அந்த ஆடியோவை நீங்கள் கேட்டால் உங்களுக்கும் உதவ வேண்டும் என தோன்றும்.
அந்த அளவுக்கு அவர் அழுதபடியே பேசினார். உதவி என கேட்டால் கொடுத்து தொலைக்க வேண்டியதுதான். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.