உயிருக்கு ஆபத்து.. விசிக தலைவர் திருமாவளவனுக்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு!
உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் விசிக கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திடீரெனப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இவரது மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் பட்டியலினத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தத் தமிழகம் வந்த மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே,இங்குள்ள பட்டியலினத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உயிருக்கு ஆபத்து..
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் எப்போதும் தனிப் பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனிப் பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்புக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.