யார் காலிலும் விழுவார்கள் - அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்‌

Tamil nadu ADMK BJP Edappadi K. Palaniswami
By Sumathi Apr 19, 2025 04:01 AM GMT
Report

அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணி

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

sdpi - admk

அதன்படி அதிமுக, பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இதனால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி (இந்திய சமூக ஜனநாயக கட்சி) விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.

3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய்

3 முறை நிராகரிக்கப்பட்ட கூட்டணி அது; ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை - ஒரே போடுபோட்ட விஜய்

 SDPI விலகல்

தேவை என்றால் யார் காலிலும் விடுவார்கள். தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். இதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்ட நிலையில்,

யார் காலிலும் விழுவார்கள் - அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்‌ | Sdpi Pulls Out Of Aiadmk Alliance Reason

தற்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போகிறது. மேலும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் விலகுவதாக கூறப்படுகிறது.