சாதாரண சளிதானே என்று அலட்சியம் வேண்டாம்; அவ்வளவுதான் - பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை!
ஜேஎன்1 வகை வைரஸ் குறித்து முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜேஎன்1 வைரஸ்
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் உலக நாடுகள் நடுக்கத்தில் உள்ளன. கேரளாவில் தினசரி பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ‘ஜேஎன்1 வகை கோவிட் பரவுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கவனம் தேவை
சாதாரண சளி என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அது கொரோனாவாக இருக்கலாம். நீண்ட கால உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். மாரடைப்பு, பக்கவாதம், மனநல பிரசனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கொரோனா அச்சுறுத்தலைசமாளிக்க முடியும். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா வைரசை எதிர்கொண்ட அனுபவம் இந்தியாவுக்கு உள்ளதால், இப்போது பரவும் வைரசையும் கட்டுப்படுத்த முடியும்’ என்று கூறினார்.
முன்னதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளை கேட்டுக் கொண்டதால் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு மீண்டும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்,
கொரோனா அச்சுறுத்தலைசமாளிக்க முடியும். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா வைரசை எதிர்கொண்ட அனுபவம் இந்தியாவுக்கு உள்ளதால், இப்போது பரவும் வைரசையும் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.