ஊரடங்கு? மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா - மத்திய அரசு முக்கிய உத்தரவு

COVID-19 Kerala India Virus Death
By Sumathi Dec 21, 2023 11:43 AM GMT
Report

கேரளாவில் ஒரே நாளில் 300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று 

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

அதன்படி, அங்கு ஒரே நாளில் 300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 90 விழுக்காடு கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்.

தலைவிரித்தாடும் கொரோனா: ஒரே நாளில் 292 பேர் பாதிப்பு - 3 பேர் பலி!

தலைவிரித்தாடும் கொரோனா: ஒரே நாளில் 292 பேர் பாதிப்பு - 3 பேர் பலி!

மத்திய அமைச்சர் தகவல்

நாடு முழுவதுமாக கொரோனா தொற்றால் 2,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது. அதனைத் த்ப்டர்ந்து, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.

corona spread again

அதில், கொரோனா பரவல் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சப்படத் தேவையில்லை. அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் இருக்கவும். கண்காணிப்பை அதிகரிக்கவும். தேவையான மருத்துவ உபகரணங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.