தலைவிரித்தாடும் கொரோனா: ஒரே நாளில் 292 பேர் பாதிப்பு - 3 பேர் பலி!
ஒரே நாளில் கொரோனாவால் 292 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
உலக நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய வகையான JN1 பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், கேரளாவில் மட்டும் 292 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2041 ஆக அதிகரித்துள்ளது.
3 பேர் பலி
இந்த புதிய வகை கொரோனா 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அதிகமாக தாக்குகிறது. உருமாறிய கொரோனா ஜெஎன்.1 கிட்னி மற்றும் இதய பிரச்சனைகளை உண்டாக்குவதாகவும் எச்சரித்துள்ளனர். எனவே, கட்டாயமாக வெளி இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணியாமல் செல்ல வேண்டாம் எனவும்,
முடிந்த வரை சமூக இடைவெளியை பின்பற்றும்படி சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.